Wednesday, October 12, 2011

 வனம் சுமந்த குளுமை


வானம் அளந்த திமிர்


பெருங்காற்றின் முழுச்சுதந்திரம்


தன் சேயணைத்த தாய்மை


ஒரு மழைக்காலத்தின் நீர்மணிகள்


புதியது கொண்டு


பழையது தள்ளும் தன் லாவகம்


ஒரு ஒய்வு நேர சுத்தப்படுத்தலின் மிச்சம்


திடீரென விடுபட்ட தனிமை


ஒரு மதிய நேர இளங்காற்று


சிறு கூட்டின் கதகதப்பு


மெல்லியல்பில் இரும்புறுதி


இவற்றில் எதைச் சொல்கிறது,


ஓர் ஒற்றை யிறகு?

2 comments:

  1. ஒற்றை + இறகு = ஒற்றையிறகு

    தலைப்பு? your choice.

    ReplyDelete